
S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E03 தொழில்நுட்பமும் காந்தியும் | ராம் & பாஸ்கி
S42 E03 - தொழில்நுட்பமும் காந்தியும் தொழில்நுட்பம் மனிதர்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் உயர்த்த வேண்டும். அவர்களைச் சுரண்டாமல், அவர்களின் பொருளாதார நிலையையும் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் ஆற்றலையும் வலுப்படுத்த வேண்டும். இதுவே தொழில்நுட்பம் குறித்த காந்தியின் பார்வையில் மையமாக இருந்தது. இன்று ஏஐயும் அல்காரிதங்களும் நமது வேலை, நுகர்வு, அரசியல் தேர்வுகள் வரை செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தச் சூழலில், நம் வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடு யாரிடம் இருக்கிறது? காந்தியின் பார்வை இந்தக் கேள்வியை அணுக நமக்கு எப்படி உதவுகிறது? தொழில்நுட்பம், அதிகாரம், பொருளாதாரம் ஆகியவற்றின் உறவைப் பற்றி ராம் & பாஸ்கியுடன் ஓர் உரையாடல். கேளுங்கள்; உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
