
S41 கத கேளு கத கேளு E04 கூத்தும் இசையும் | ராம் & பாஸ்கி
உழைக்கும் நேரத்திலும், உழைத்துக் களைத்து ஓய்ந்திருக்கும் பொழுதிலும் பாட்டும் கதையும் நம்முடன் இருந்திருக்கின்றன. கூட்டாகச் செய்யும் வேலைகள், ஊர்த் திருவிழாக்கள், ஒன்றைப் பெற்ற மகிழ்ச்சி, இழப்பின் துயரம் என வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இயல், இசை, நாடகம் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாகவும், ஒருவரையொருவர் இணைக்கும் பிணைப்பாகவும் தொடர்கின்றன. மக்களின் வாழ்வோடு கலந்திருக்கும் கூத்தையும் இசையையும் பற்றிய உரையாடல், இந்த வாரம் ‘கத கேளு கத கேளு’ நிகழ்ச்சியில் ராம் & பாஸ்கியுடன்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
