
S32 போரும் பொருளாதாரமும் | E02 சந்தை மூலதானம் | ராம் & பாஸ்கி
நமது நுகர்வே இன்றைய போர் பொருளாதாரத்தின் ஆணிவேர். மீதமுள்ள சொற்ப வளங்களின் ஆதிக்கமும், அனைத்து நுகர்வின் லாபத்தில் பங்கும், தங்களுக்கு தொடரவேண்டும் என்று, இன்று நாடுகளின் ஜனநாயகத்தை குலைத்து புதிய அடக்குமுறை அரசாங்கங்களின் ஆதிக்கம் நிறுவப்படுகிறது, நியாயம் கற்பிக்கப் படுகிறது. பழைய மக்களை மையப்படுத்தும் மரபுகள் மாற்றப் படுகின்றன, தொழில் நுட்பத்தை கொண்டு புதிய கட்டுப்பாடுகளும், நியதிகளும் நிறுவப் படுகின்றன. இதுவே நாம் ஆசைப்படும் புதிய உலகமென்றும் நமக்கு கற்பிக்கப் படுகின்றது. நுகர்வை வளர்ப்பதில், இன்பம் அடைவதில், நமது அடிமைத்தனம் தொடரும். நுகர்வை குறைப்பதில், உள்ளூர் வளங்களை உள்ளூர் மக்களே காப்பதில், இதற்கான முயற்சிகளுக்காக குரல் கொடுப்பதில், பங்கெடுப்பவர்கள், இன்றைய போர் பொருளாதாரத்தின் எதிரிகள் என்று சித்தரிக்கப் படுவார்கள்
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
