
S40 எல்நினோ: E04 தமிழ்நாடு — விரிவான பார்வை | ராம் - பாஸ்கி
S40 E04 | எல்நினோ: தமிழ்நாடு - விரிவான பார்வை எல்நினோ தமிழ்நாட்டிற்கு வெறும் வானிலை மாற்றம் மட்டுமல்ல. பருவமழையின் அளவும் காலமும் மாறும்போது, அதன் தாக்கம் நேரடியாக நீர், உழவு, உணவு மற்றும் பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது. குறிப்பாக குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட பயிர்ப் பருவங்கள் மழை மற்றும் நீர் கிடைப்பதில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படலாம். விதைப்பு தாமதம், பாசன நீர்ப் பற்றாக்குறை, பயிர் வளர்ச்சியில் பின்னடைவு, மகசூல் குறைவு அல்லது சில பகுதிகளில் பயிர்ப் பருவமே தோல்வியடையும் நிலை வரை உருவாகலாம். இதன் தொடர்ச்சியாக விவசாயிகளின் வருமானம், உணவுப் பொருட்களின் வரத்து, சந்தை விலை மற்றும் கிராமப்புற பொருளாதாரமும் அழுத்தத்தைச் சந்திக்கும். தமிழ்நாட்டின் தனித்துவமான வடகிழக்குப் பருவமழை, காவிரி நீர், நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், பயிர்ச் சுழற்சி ஆகியவற்றோடு எல்நினோ எவ்வாறு தொடர்புபடுகிறது? ஒரு மோசமான பயிர்ப் பருவத்தின் தாக்கம் வயலிலிருந்து சந்தைக்கும், சந்தையிலிருந்து நமது அன்றாட வாழ்க்கைக்கும் எப்படிப் பரவுகிறது? ராம் & பாஸ்கி விரிவாக உரையாடுகிறார்கள்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
