
S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E02 சூழலியல் காந்தி | ராம் & பாஸ்கி
நூறு ஆண்டுகளுக்கு முன்பே பூமி, மனிதத் தேவைகள், நுகர்வு ஆகியவற்றின் உறவை ஆழமாகச் சிந்தித்தவர் காந்தி. நமக்கு எவ்வளவு தேவை? அந்தத் தேவை எங்கே பேராசையாக மாறுகிறது? பூமியிடமிருந்து நாம் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்? அதற்கான பொறுப்பு என்ன? இந்தக் கேள்விகளைத் தனது அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதாரப் பார்வையிலும் தொடர்ந்து அணுகினார். போரும் விடுதலைப் போராட்டமும் சூழ்ந்த காலத்தில் இத்தகைய பார்வையுடன் செயல்பட்டது கவனத்திற்குரியது. இன்று பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவரது சிந்தனைகள் நமக்கு எவ்வாறு துணை நிற்கின்றன? நமது நுகர்வு, உற்பத்தி, வாழ்க்கைமுறை ஆகியவற்றில் அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம்? அவர் மேற்கொண்ட முயற்சிகளும் விட்டுச் சென்ற அனுபவங்களும் நமக்கு என்ன கற்றுத்தருகின்றன? இவற்றைக் குறித்து ராம் & பாஸ்கியுடன் விரிவான உரையாடல் - தொடர்ந்து கேளுங்கள்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

