
S41 கத கேளு கத கேளு E01 அறிமுகம் | ராம் & பாஸ்கி
கத கேளு கத கேளு இது ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி மட்டும் பேசும் பாட்காஸ்ட் இல்லை. நம்மைத் தேடி வரும் ஒரு நல்ல கதை, ஒரு மனிதரின் அனுபவம், ஒரு கலை, ஒரு பாடல், ஒரு திருவிழா, ஒரு மரபு, ஒரு சிறிய ஊர், அல்லது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான அழகான உறவு - இதில் எது வேண்டுமானாலும் அடுத்த எபிசோடாக இருக்கலாம். மனிதர்களை இன்னும் நெருக்கமாக்கும் கதைகள், சமூகத்தில் இருக்கும் நம்பிக்கைகள், கலை மற்றும் இசை தரும் ஆறுதல், திருவிழாக்கள் உருவாக்கும் கூட்டுணர்வு, இயற்கையோடு மீண்டும் இணைந்து வாழ மனிதர்கள் செய்யும் சிறிய முயற்சிகள் - இவற்றைத் தேடிப் பேசும் ஒரு சுதந்திரமான தொடர்தான் “கத கேளு கத கேளு.” உலகம் முழுக்க எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும், மனிதர்கள் இன்னும் ஒருவரை ஒருவர் தேடுகிறார்கள். பாடுகிறார்கள். கொண்டாடுகிறார்கள். புதிதாக உருவாக்குகிறார்கள். பகிர்ந்துகொள்கிறார்கள். இயற்கையோடு சேர்ந்து வாழ முயற்சி செய்கிறார்கள். அப்படிப்பட்ட சிறிய நம்பிக்கைகளின் கதைகளைக் கேட்கவும், பேசவும், பகிரவும் ஒரு இடம்தான் இந்தப் பாட்காஸ்ட்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
