
S39 மீறல் | E01 அறிமுகம் | Ram and Baski
தினமும் நம் வாழ்க்கை எண்ணற்ற மீறல்களைக் கடந்து செல்கிறது. அவை வெறும் சட்ட மீறல்கள் மட்டுமல்ல. நம் வாழ்வியல் சிந்தனைகள் முதல் சமூக, பொருளாதார அமைப்புகள் வரை பல அடுக்குகளில் மீறல்கள் பரவியுள்ளன. சூழலியல், வளங்கள், மனிதநேயம், நுகர்வு, அதிகாரம் என எங்கு பார்த்தாலும் அவற்றின் தடங்களை காண முடிகிறது. இந்த புதிய சீசனில், இத்தகைய மீறல்களை அடையாளம் காணவும், அவற்றின் காரணங்களை ஆராயவும், அவற்றைக் கடந்து ஒரு அறம்சார் சமூகத்தை உருவாக்குவதற்கான வழிகளைப் பற்றி பேசவுள்ளோம். அறத்தின் எல்லை தாண்டும் போது, அது அத்துமீறலாக மாறுகிறதா?
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
