
S33 எது நவீனம்? E04 Technology and Decision Fatigue | ராம் & பாஸ்கி
நாம் இன்று எடுக்கும் ஒவ்வொரு முடிவின் பின்னாலும் ஒரு மறைமுகச் சோர்வு உள்ளது அதுவே Decision Fatigue. ஆனால் ஸ்மார்ட்போன்கள், ஆப்ஸ்கள், நொடிக்கு நூறு அறிவிப்புகள், முடிவில்லாத content scroll ஆகியவை இந்த சோர்வை பல மடங்கு அதிகப்படுத்துகின்றன. தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்படுத்துதல் எவ்வாறு நம் மூளையை முடிவெடுக்க முடியாத அளவுக்கு தளரச் செய்கிறது, notifications மற்றும் infinite scroll நம்மை எப்படிக் default முடிவுகளுக்கு தள்ளுகிறது, social media-வின் choice overload நம் மனத்தை எவ்வாறு மெதுவாகச் சோர்வடைய செய்கிறது என்பதையும் இந்த அத்தியாயம் பேசுகிறது. மேலும் இது தினசரி வாழ்க்கை, வேலை, படைப்பாற்றல், உறவுகள் என நம் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்கிறது. இறுதியில், இந்த சோர்விலிருந்து நம்மை எப்படி பாதுகாக்கலாம் என்பதற்கான பயனுள்ள வழிகளையும் பகிர்கிறது.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

